15 வருட சர்வதேச கிரிக்கெட் பயணம்- எண்ணில் அடங்கா சாதனைகள்- ஓய்வு முடிவை அறிவித்தார் பொல்லார்ட்


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 20 April 2022 4:21 PM GMT (Updated: 2022-04-20T21:57:51+05:30)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் இன்று அறிவித்துள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 34 வயதான இவர் 20-வது ஓவர் போட்டிகளில்  விளையாடி மகத்தான வீரராக விளங்கி வருகிறார். ஐபிஎல் போட்டியில் பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருவதால் இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த வீரராக உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளில் அணியின் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சில் பதற்றமில்லாமல் கலக்குபவர்.

123 ஒரு நாள் போட்டிகளிலும் 101 இருபது ஓவர் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இவர் விளையாடி உள்ளார். இவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story