முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை ?- சென்னை அணியுடன் இன்று மோதல்


முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை ?- சென்னை அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 21 April 2022 7:08 AM GMT (Updated: 2022-04-21T18:10:38+05:30)

இன்று நடைபெறும் போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன . 

நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த  தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் தோல்வி அடைந்து  புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது .

முன்னாள் சாம்பியன் மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , ஒரு போட்டியிலும்   வெற்றி பெறவில்ல்லை .மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.


Next Story