சென்னை-மும்பை அணிகளின் மோதல், இந்தியா-பாகிஸ்தான் போட்டி உணர்வை தருகிறது- ஹர்பஜன் சிங்


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 21 April 2022 11:34 AM GMT (Updated: 21 April 2022 12:38 PM GMT)

மும்பை- சென்னை அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன . நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த  தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் தோல்வி அடைந்து  புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது .

மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை - சென்னை அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி குறித்து முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

இந்த போட்டி குறித்து அவர் கூறுகையில், " 10 வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக  விளையாடிவிட்டு பின்னர் முதன்முதலில் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது வித்தியாசமாக உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை இரு அணிகளுமே சிறப்பானவை. 

இந்த இரண்டு ஐபிஎல் ஜாம்பவான்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் உணர்வை அளிக்கிறது."

மும்பை அணிக்கு எதிராக நான் முதலில் களத்தில் இறங்கியபோது, அந்த ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் இருந்ததால், போட்டி விரைவில் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த ஆட்டம் சீக்கிரம் முடிந்து சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டது " என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story