ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் புதிய சாதனை


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 21 April 2022 12:55 PM GMT (Updated: 21 April 2022 12:55 PM GMT)

டெல்லி அணியின் வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற   போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய டெல்லி அணி 9 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம், ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல்லில் ரோகித் சர்மா 1018 ரன்களை குவித்துள்ளார்.

அவருக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு (பஞ்சாப் அணி) எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.

Next Story