சோதனை மேல் சோதனை- பெங்களூரு அணியின் மோசமான சாதனையை முறியடித்தது மும்பை அணி


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 22 April 2022 11:32 AM GMT (Updated: 2022-04-22T17:02:49+05:30)

நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத ஒரே அணியாக மும்பை உள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

பரபரப்பான போட்டியில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக 7-வது தோல்வியை சந்தித்து உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத ஒரே அணியாக மும்பை உள்ளது. ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் அணிகளுள் ஒன்றாக கருதப்படும் மும்பை அணி தற்போது தொடர் தோல்வியில் உள்ளது. 

7 போட்டிகளில் தொடர் தோல்வியின் மூலம் அந்த அணி தற்போது மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிகளில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியும், 2019-ம் ஆண்டு பெங்களூரு அணியும் தங்களது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து இருந்தன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்திப்பது 11-வது முறையாக நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story