ஐபிஎல் 2022 :அகமதாபாத்-ல் நடைபெறுகிறது இறுதிப்போட்டி..!


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 23 April 2022 5:25 PM GMT (Updated: 2022-04-23T22:55:18+05:30)

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன்  கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை .புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது ஐபிஎல்  தொடரின் லீக் ஆட்டங்கள் மட்டும் அங்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிபோட்டி நடைபெறும் இடங்கள் ,பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் .

முதல் பிளே-ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும், அதைத் தொடர்ந்து மே 27 மற்றும் 29 அன்று அகமதாபாத்தில் இரண்டாவது பிளே-ஆப் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் பிளே- ஆப் சுற்று மற்றும் இறுதிபோட்டிக்கு , 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கங்குலி தெரிவித்துள்ளார் 

Next Story