"சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கலாம் என நினைத்தேன்" - முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த பிரெட் லீ


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 24 April 2022 5:08 PM GMT (Updated: 2022-04-24T22:38:29+05:30)

சச்சினை முதல் முறையாக சந்தித்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ பேசியுள்ளார்.

மும்பை, 

கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என உலக கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாய் வருகிறார். இதனை முன்னிட்டு இன்று பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சச்சினின் பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ , தான் சச்சினை சந்தித்த முதல் சந்திப்பை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர், " 1999ல் கான்பெராவில் சச்சினை முதன்முதலில் சந்தித்தேன். ஆஸ்திரேலியாவிற்கு  சுற்றுப்பயணம் செய்த இந்திய அணிக்கு எதிராக நான் பிரதமர் லெவன் அணியில் விளையாடிக்கொண்டிருந்தேன். இந்திய அணியில் சச்சின் இருந்தார். 

அவர் பேட்டிங் செய்ய வந்தபோது நான் சிறந்த சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசினேன். அப்போது நான் சச்சினிடம் ஆட்டோகிராப் பெறலாம் என நினைத்தேன். நான் வைத்திருந்த பந்தில் அவரிடம் கையெழுத்து வாங்கலாம் என்று நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.

Next Story