”மின் நெருக்கடி ஏன் உள்ளது” - ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் டோனி மனைவி கேள்வி


”மின் நெருக்கடி  ஏன் உள்ளது” - ஜார்கண்ட் அரசுக்கு  கிரிக்கெட் வீரர் டோனி மனைவி கேள்வி
x
தினத்தந்தி 26 April 2022 5:05 AM GMT (Updated: 2022-04-26T10:35:44+05:30)

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஞ்சி

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்  என கூறி உள்ளார்.


Next Story