இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக தேர்வாகிறார் பென் ஸ்டோக்ஸ்? -வெளியான தகவல்


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 27 April 2022 1:50 PM GMT (Updated: 2022-04-27T19:20:32+05:30)

பென் ஸ்டோக்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஜோ ரூட் அறிவித்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த  இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்தது.இதனால் ஜோ ரூட் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.

இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் விரைவில் கேப்டன் பதவியை தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இயக்குனரான ரோப் கீ-யை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் அணியில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை மீண்டும் அணியின் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் கேரி கிர்ஸ்டன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story