பிராவோவிடம் கீப்பிங்கை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாம் என நினைத்தேன்- தோனி


Image Courtesy : Twitter / CSK
x
Image Courtesy : Twitter / CSK
தினத்தந்தி 28 April 2022 11:38 AM GMT (Updated: 28 April 2022 11:38 AM GMT)

பிராவோ உடன் நடந்த சுவாரசிய நிகழ்வு குறித்து தோனி பேசியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் சென்னை அணி வீரர்கள் தோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் ஒவ்வொரு புகைப்படப்பாக காண்பிக்கப்பட்டு அது குறித்து அவர்களுக்கு இருந்த நினைவுகள் பற்றி கேட்கப்பட்டது.

அப்போது ஒரு புகைப்படத்தை பார்த்து பதில் அளித்த தோனி, " ஒரு ஓவருக்கு பிராவோ 1 வைடு பந்துகளை மட்டுமே வீசலாம் எனவும் 3-4 வைடு பந்துகளை வீச கூடாது எனவும் நான் தெரிவித்தேன்.

பேட்ஸ்மேன்கள் பிராவோவின் பந்துகளை அடித்த விளையாடிய அந்த சமயத்தில் பிராவோவிடம் கீப்பிங்கை கொடுத்து விட்டு நான் பந்து வீசலாம் என நினைத்தேன. ஏனென்றால் என்னால் அதை விட மோசமாக பந்துவீச முடியாது " என அவர் தெரிவித்தார்.

Next Story