ஜூன் 23-ல் தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி- அட்டவணை வெளியீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 April 2022 2:31 PM GMT (Updated: 2022-04-28T20:01:38+05:30)

தொடக்க ஆட்டத்தில் நெல்லை அணியுடன் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதுகிறது.

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறுவதுபோல தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 


இந்த போட்டிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இளம் வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராம அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த போட்டி உதவிகரமாக இருப்பதுடன், அவர்கள் ஐ.பி.எல். போன்ற பெரிய போட்டியில் நுழைவதற்கும் அடித்தளமாக விளங்குகிறது.


அந்த வகையில் இந்தாண்டிற்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 23 முதல் திருநெல்வேலி, நத்தம் (திண்டுக்கல்), கோவை மற்றும் சேலத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இதற்காக கோயம்புத்தூர், எஸ்என்ஆர் கல்லூரி மைதானம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம், நத்தம் என்பிஆர் கல்லூரி மற்றும் ஐசிஎல் - சங்கர் நகர் மைதானம், திருநெல்வேலி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் (28 லீக் + பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டி) நடைபெற உள்ளன.

ஜூலை 31-ம் தேதி கோவையில் இறுதிப் போட்டியும், சேலம் மற்றும் கோவையில் பிளேஆஃப் போட்டிகளும் நடைபெறும்.

ரசிகர்களை அனுமதிப்பது குறித்து போட்டி நெருங்கும் முன்னதாக அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story