ஐ.பி.எல் கிரிக்கெட்: குஜராத்தின் வீறுநடையை தடுக்குமா பெங்களூரு? - இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட்: குஜராத்தின் வீறுநடையை தடுக்குமா பெங்களூரு? - இன்று மோதல்
x
தினத்தந்தி 29 April 2022 11:57 PM GMT (Updated: 29 April 2022 11:57 PM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.

இந்த நிலையில், மும்பை பிராபோர்னில் இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கும் நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. 

பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் மட்டுமே பலம் வாய்ந்த குஜராத்தின் வீறுநடைக்கு பெங்களூரு அணியால் முட்டுக்கட்டை போட முடியும். ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும்நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story