கவுண்டி கிரிக்கெட் : புஜாரா மீண்டும் இரட்டை சதமடித்து அசத்தல்..!


கவுண்டி கிரிக்கெட் : புஜாரா மீண்டும் இரட்டை சதமடித்து அசத்தல்..!
x
தினத்தந்தி 30 April 2022 5:06 PM GMT (Updated: 2022-04-30T22:36:14+05:30)

இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்

லண்டன்,

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தார். 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் இந்திய அணிக்காக பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து நாட்டின் பிரபல உள்நாட்டு தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் சஸேக்ஸ்  அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். 

தற்போது நடைபெற்று வரும் டர்ஹாம் அணிக்கு எதிராக  டெஸ்ட் போட்டியில் சஸேக்ஸ் அணி விளையாடி வருகிறது .இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய புஜாரா இரட்டை  சதம் அடித்து அசத்தினார் .

முன்னதாக  நடைபெற்ற வேறு அணிக்கு எதிரான  கடந்த  போட்டியில் புஜாரா இரட்டை சதம் அடித்தார் , இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் 

Next Story