"கேப்டன்சி தனக்கானது இல்லை என ஜடேஜா உணர்ந்துவிட்டார்" - பிரபல வீரர் கருத்து..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 1 May 2022 8:34 AM GMT (Updated: 2022-05-01T14:04:51+05:30)

சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா நேற்று ராஜினாமா செய்தார்.

மும்பை,

2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை  கோப்பையை வென்றுள்ளது.  

அதற்கு முக்கிய காரணமாக கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி இந்த முறை போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால் அது சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளி பட்டியலில் 9ம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை நேற்று ஜடேஜா ராஜினாமா செய்தார்.  அதை தொடர்ந்து மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் ஜடேஜா குறித்து பேசிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறுகையில், "ஜடேஜா போட்டியின் கடைசி சில தினங்களுக்கு முன் கேப்டன் பதவியைப் பெற்றார். அதன் பின் பேட்டிங், பீல்ட்ங் என எதுவும் அவருக்கு சரியாக வரவில்லை.

அவர் அதை உணர்ந்துவிட்டார். இந்த கட்டத்தில் கேப்டன்சி தனக்கானது இல்லை என்ற உண்மையை அவர் புரிந்துகொண்டார். இதனால் மீண்டும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி இந்த தொடரை வெற்றிகரமாக முடிப்பார் என நம்புகிறேன் " என அவர் தெரிவித்தார்.

Next Story