"அக்தரை விட வேகமாக நான் வீசிய பந்து கணக்கிடப்படவில்லை" -முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

அக்தரை விட தான் வேகமாக பந்துவீசியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 85 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். 87 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.
இவர் தற்போது ஷோயிப் அக்தரை விட தான் வேகமாக பந்துவீசியுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகப் பந்தை வீசியவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர்.
இவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2002 ஆம் ஆண்டு மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்து தான் தற்போது வரை சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் வேகமான பந்தாக உள்ளது.
இது குறித்து முகமது ஷமி கூறுகையில், " ஒரு போட்டியில் நான் மணிக்கு 162 மற்றும் 164 கிமீ வேகத்தில் பந்து வீசியிருக்கிறேன். அப்போது பவுலிங் இயந்திரம் வேலை செய்யவில்லை என தெரிவித்தனர். அதனால் அது கணக்கிடப்படவில்லை என்று கூறப்பட்டது.
மணிக்கு 160 கிமீ வேகம் வீசிய பந்துவீச்சாளர்களை நீங்கள் பார்த்தீர்களானால் அவர்கள் அனைவரும் ஒருமுறை அல்லது 2 முறை தான் அதை செய்து இருப்பார்கள். அவர்கள் அதை தொடர்ந்து செய்வது இல்லை." என ஷமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story