ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவான் கான்வே அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 4 May 2022 4:58 PM GMT (Updated: 4 May 2022 4:58 PM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு- சென்னை - அணிகள் மோதுகின்றன

மும்பை.

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு-  சென்னை -  அணிகள் மோதுகின்றன .

இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ் ,விராட் கோலி களமிறங்கினர் .தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர் .அதன்பிறகு பிளஸ்சிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில்  (ரன் அவுட் ) தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .அடுத்த ஓவரிலே விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்து வந்த மகிபல் லோம்ரோர் ,ரஜத் படிதார் இருவரும் நிலைத்து  ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 123 ரன்னாக இருந்தபோது ரஜத் படிதார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய  மகிபால் லோம்ரோர் 42  ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார் இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173  ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடியது .

தொடக்க வீரர்களாக டேவோன் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.சென்னை அணி சிறப்பான தொடக்கம் அமைத்தனர் .தொடக்க விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .அதன்பின்னர் வந்த ராயுடு 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மறுபுறம் அதிரடியாக ஆடிய டேவான் கான்வே 33  பந்துகளில் அரைசதம் அடித்தார் .

Next Story