பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் - பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 11:00 AM GMT (Updated: 2022-05-05T16:30:25+05:30)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது

மும்பை ,

பாப் டு பிளெஸ்சிஸ்  தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வரிசையாக ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து  5 வெற்றி, 5 தோல்வி என புள்ளி பட்டியலில் பின் தங்கியது .

நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது 

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியதாவது ;

நாங்கள் ஒரு நல்ல ரன்கள் இலக்கு  வைத்தோம். நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். பந்துவீச்சில்  நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். 

பவர்பிளேயில்  ஸ்கோர் செய்ய நல்ல நேரம் என்று நினைத்தேன். எங்களது பீல்டிங் அற்புதமாக இருந்தது. சில சிறந்த கேட்ச்சிங் மற்றும் நல்ல பந்துவீச்சு இருந்தது . அனுபவம் வாய்ந்த வீரர்களை  பெற்ற நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ” என்று அவர் கூறினார்.


Next Story