காயத்திற்கு பின் கிரிக்கெட் விளையாட முடியாதோ என அஞ்சினேன் - ஜோப்ரா ஆர்ச்சர்


Image Courtesy : England Cricket Twitter
x
Image Courtesy : England Cricket Twitter
தினத்தந்தி 5 May 2022 2:49 PM GMT (Updated: 5 May 2022 2:49 PM GMT)

ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார்

லண்டன்:

இங்கிலாந்து அணியின்  வேக பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார் 

காயத்திற்கு பின் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோப்ரா ஆர்ச்சர்  கூறியதாவது:-

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு முதல் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் விளையாடலாம் என நம்பிக்கையாக நான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என நான் பந்துவீசும் போது தான் தெரிந்தது. உடனே போட்டியில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது.

 இப்போது தான் குணமடைந்து வருகிறேன். ஒரு கட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது என அஞ்சினேன். இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறேன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு நம்பிக்கை அளித்தது .இவ்வாறு கூறியுள்ளார் .


Next Story