மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு : காயம் காரணமாக டைமல் மில்ஸ் விலகல்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 5 May 2022 6:49 PM GMT (Updated: 2022-05-06T00:19:17+05:30)

டைமல் மில்ஸ் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விலகியுள்ளார்

மும்பை, 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி  விளையாடியுள்ள 9 போட்டிகளில் 1 ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .

இந்நிலையில் மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இந்த  ஐபிஎல் தொடரில்   இனி வரும் போட்டிகளில்    இருந்து  விலகியுள்ளார் ,அவருக்கு பதிலாக  தென் அப்பரிக்கவை சேர்ந்த  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார் 


Next Story