கான்வே அதிரடி அரைசதம் : டெல்லிக்கு எதிராக சென்னை தொடக்க வீரர்கள் சிக்சர் மழை


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 8 May 2022 2:53 PM GMT (Updated: 2022-05-08T20:23:43+05:30)

நடப்பு ஐபிஎல் தொடரில் கான்வே தொடர்ச்சியாக 3-வது அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டெவன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தி இருந்த கான்வே இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார்.

28 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அவர் அரைசதம் கடந்தார். தற்போது வரை சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story