"வேகம் மட்டுமே முக்கியமில்லை"- உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் இந்திய வீரர் கருத்து


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 8 May 2022 4:42 PM GMT (Updated: 8 May 2022 4:42 PM GMT)

உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பிரபல இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

நடப்பு ஐபிஎல் சீசனில் தனது மின்னல் வேக பந்துவீச்சால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்  உம்ரான் மாலிக். ஐதராபாத் அணியை சேர்ந்த இவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது சாதனையை தானே முறியடித்து வேகமாக பந்துவீசி வருகிறார்.  

தோனிக்கு எதிராக 154 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய இவர் அதன்பிறகு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனைப் படைத்தார்.

இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என குரல்கள் எழுந்து வரும் நிலையில் இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், " அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாடுவார். ஆனால் நீங்கள் உங்கள் வேகத்தை   சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் 156 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் பந்து மட்டையில் அடித்த வேகத்தில் 256 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் . 

எந்தவொரு தொடரானாலும் போட்டிகள் முன்னேறும் போது ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், அது பேட்டிங்கிற்கு மிகவும் உகந்ததாக மாறிவிடும். நான் ஊடங்ககளில் பார்க்கிறேன். எங்கு பார்த்தாலும் உங்களின் 156, 157 என வேகத்தை பார்க்கமுடிகிறது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அது முக்கியமில்லை. நீங்கள் அந்த வேகத்தை பிட்சில் சரியான இடத்தில் வீசவேண்டும் . உம்ரான் மாலிக் தொடர்ந்து ஸ்டம்பு லைனில் பந்துவீசினால்  அவர் மிகவும் சீரானவராக இருப்பார். 156, 157 - மிகவும் நல்லது. ஆனால் அதை தொடர்ந்து சரியான திசையில் வீசுங்கள்." என அவர் தெரிவித்தார்.

Next Story