"தொடர்ந்து விளையாடாமல் 'பேட்டிங் ஃபார்முக்கு' எப்படி திரும்ப முடியும் "- கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 9 May 2022 12:36 PM GMT (Updated: 2022-05-09T18:06:30+05:30)

கோலியை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும்.

தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வு எடுத்தால் எவ்வாறு பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப முடியும் என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோலி குறித்து அவர் கூறுகையில், "சர்வதேச போட்டிகள் தான் கோலிக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நீங்கள் விளையாடவில்லை என்றால் உங்கள் ஃபார்மை எப்படி திரும்பப் பெறுவீர்கள். 

ஓய்வு அறையில் உட்கார்ந்து இருப்பதால் உங்கள் ஃபார்மை நீங்கள் திரும்பப் பெறப் போவதில்லை. நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஃபார்மை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று கவாஸ்கர் கூறினார்.

Next Story