நயன்தாரா நடிக்கும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் தோனி ?


Image Courtesy : IPL / Twitter
x
Image Courtesy : IPL / Twitter
தினத்தந்தி 11 May 2022 12:56 PM GMT (Updated: 2022-05-11T18:26:12+05:30)

சமீபத்தில் விக்னேஷ் சிவன், தோனியை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கி இருந்தார்.

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கன்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் எப்போதும் தோனிக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக 4 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ள தோனி ரசிகர்களின் "ஆல் டைம்" நாயகனாக திகழ்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெற்ற பின்னர் இயற்கை விவசாயம் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் தோனி தற்போது தன் அடுத்த அவதாரத்துக்கு தயாராகியுள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனி ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாகவும் கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கி  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story