ஐபிஎல் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 11 May 2022 5:12 PM GMT (Updated: 2022-05-11T22:42:45+05:30)

இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

மும்பை,

 ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது 

தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் வந்த அஸ்வின் சிறப்பாக விளையாடினார் . அவருடன் இணைந்து ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினார் .  அவர் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடினார் . மறுபுறம் சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார்.அதன்பிறகு அவர் 50 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .விக்கெட்டுக்களை இழந்தாலும் படிக்கல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.படிக்கல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார் .

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160  ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது .

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் .ஸ்ரீகர் பரத் களமிறங்கினர் .தொடக்கத்தில் முதல் ஓவரில்  ரன் எதுவும் எடுக்காமல் ஸ்ரீகர் பரத் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் டேவிட் வார்னருடன் இணைந்து அற்புதமாக விளையாடினர் .ஒரு புறம் வார்னர் பொறுமையுடன் ஆட .மறுபுறம் மார்ஷ் அதிரடி கட்ட தொடங்கினார் .அவர் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டார் .தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

Next Story