வேங்கிக்காலில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு கிரிவலம் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை


வேங்கிக்காலில் எல்.ஐ.சி. முகவர் வீட்டில் நகை, பணம் திருட்டு கிரிவலம் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-13T18:38:16+05:30)

திருவண்ணாமலை வேங்கிக்காலில் கிரிவலத்துக்கு சென்ற நேரத்தில் எல்.ஐ.சி. முகவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கிரிவலத்துக்கு சென்றார் திருவண்ணாமலை வேங்கிக்கால் மனோரஞ்ச

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்காலில் கிரிவலத்துக்கு சென்ற நேரத்தில் எல்.ஐ.சி. முகவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கிரிவலத்துக்கு சென்றார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் மனோரஞ்சிதம் நகரை சேர்ந்தவர் முருகன் எல்.ஐ.சி. முகவர். நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதேபோன்று எல்.ஐ.சி. முகவர் முருகனும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு கிரிவலத்துக்கு சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் முருகனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வெளியே வந்தனர். அப்போது முருகனின் வீடு திறந்து இருந்தது. இதை பார்த்த அவர்கள் முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்தார்.

நகை, பணம் திருட்டு

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவும் திறந்திருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story