அரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கையாடல்; ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு


அரூரில்  தனியார் நிதி நிறுவனத்தில் கையாடல்; ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-13T18:59:14+05:30)

தர்மபுரி மாவட்டம் அரூர் கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொங்கவேம்பு அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரும் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அடகு பெற்ற நகையை கையாடல் செய்ததாக

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கொங்கவேம்பு அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரும் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அடகு பெற்ற நகையை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நிதிநிறுவன அதிகாரிகள் அரூருக்கு வந்து தணிக்கை செய்தனர். அப்போது செல்வகுமார் அடகு பெற்ற 278 கிராம் நகையை எடுத்து சென்று விட்டதும், கார்த்திக் போலி நகையை அடகு வைத்து பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சரக ரீஜினல் மேலாளர் ராஜேந்திரன் அரூர் போலீசில், நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் மீதும் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story