மதுபாட்டில் விற்பனை–கடத்தல் மதுவிலக்கு போலீசார் சோதனையில் 5 பேர் கைது


மதுபாட்டில் விற்பனை–கடத்தல்  மதுவிலக்கு போலீசார் சோதனையில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-13T20:00:51+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு சப்–இன்ஸ்பெக்டர் திலகராணி நேற்று காலை சிவகாசியில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தார். அப்போது சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத

 

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு சப்–இன்ஸ்பெக்டர் திலகராணி நேற்று காலை சிவகாசியில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தார். அப்போது சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜலிங்கம் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். நாரணாபுரம் முக்கு ரோட்டில் 25 மதுபாட்டில்களுடன் மாயக்கண்ணன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் மாடசாமி என்பவர் 10 மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்டார்.. இதே போல் சப்–இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் சாட்சியாபுரம்–ஆனையூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக சிவகாசியை சேர்ந்த ராமன்(51) என்பவர் இருச்சக்கர வாகனத்தில் 29 மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக்கடை தெருவில் நடைபெற்ற வாகன சோதனையில் கோவிந்தசாமி (32) என்பவர் தனது இருச்சக்கர வாகனத்தில் 50 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.


Next Story