திண்டுக்கல் முருகபவனத்தில் நாய் கடித்ததால் காயமடைந்த முயல் குட்டி மீட்பு


திண்டுக்கல் முருகபவனத்தில் நாய் கடித்ததால் காயமடைந்த முயல் குட்டி மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2016 9:15 PM GMT (Updated: 13 Dec 2016 6:32 PM GMT)

திண்டுக்கல் முருகபவனத்தில் நாய் கடித்ததால் காயமடைந்த முயல் குட்டியை மீட்டு, வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். முயல் குட்டி திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 20). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகபவனத்தை அடுத்துள்ள காட்டு

திண்டுக்கல்,

திண்டுக்கல் முருகபவனத்தில் நாய் கடித்ததால் காயமடைந்த முயல் குட்டியை மீட்டு, வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

முயல் குட்டி

திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 20). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகபவனத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றார். அப்போது ஒரு முயல் குட்டியை, நாய் ஒன்று கடித்து இழுத்து சென்றது. உடனே ஆரோக்கியசாமி அந்த நாயை துரத்தி விட்டு, முயல் குட்டியை காப்பாற்றினார். நாய் கடித்ததில் அந்த முயல் குட்டி காயமடைந்தது.

இதையடுத்து அந்த முயல் குட்டியை, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் அவர் ஒப்படைத்தார். உடனே தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை அலுவலர்கள் அங்கு சென்று, முயல் குட்டியை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பராமரிப்பு

எனினும், முயல் குட்டியால் நடக்க முடியவில்லை. மேலும் அது புற்களை தின்ன தெரியாமல், பால் மட்டுமே குடித்தது. இதனால் அப்படியே முயல் குட்டியை காட்டில் விட்டால், ஆபத்தாகி விடும் என்று வனத்துறையினர் கருதினர். அதன்படி சிறுமலை வனச்சரகர் அலுவலகத்தில் ஒரு கூண்டில் வைத்து அந்த முயல் குட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த முயல் குட்டிக்கு தினமும் பால் கொடுக்கப்பட்டு வருகிறது. காயம் குணமாகி, புற்களை தின்பதற்கு பழகியதும் முயல் குட்டியை காட்டில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் நாயிடம் இருந்து முயல் குட்டியை மீட்டு ஒப்படைத்த வாலிபரை வனத்துறையினர் வெகுவாக பாராட்டினர்.


Next Story