கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட சேவை மைய கட்டிடங்கள் திறக்கப்படுமா?


கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட சேவை மைய கட்டிடங்கள் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Dec 2016 9:45 PM GMT (Updated: 13 Dec 2016 6:32 PM GMT)

கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட சேவை மைய கட்டிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவை மைய கட்டிடங்கள் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.வெள்ளோடு, கூம்பூர், வடுகம்பாடி, ஆர்.கோம்பை, தி.கூடலு£ர், மல்லப்பு

குஜிலியம்பாறை,

கிராம ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட சேவை மைய கட்டிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை மைய கட்டிடங்கள்

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.வெள்ளோடு, கூம்பூர், வடுகம்பாடி, ஆர்.கோம்பை, தி.கூடலு£ர், மல்லப்புரம் உள்ளிட்ட 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, சிட்டா அடங்கல், வாரிசு சான்று, சாதி சான்றிதழ், வருமான சான்று, இறப்பு மற்றும் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் வேடசந்து£ர் தாலுகா அலுலகத்திற்கு சென்றுவர வேண்டும்.

இதனால் பயனாளிகளுக்கு காலவிரயம் ஏற்படுவது மட்டுமின்றி வீண் அலைச்சலுக்கு ஆளாகும் நிலை இருந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களையும் அந்தந்த ஊராட்சிகளிலேயே பெற்று கொள்வதற்கு வசதியாக தலா ரூ.14 லட்சம் திட்ட மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய புதிய சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

சமூக விரோதிகளின் கூடாரம்

சேவை மைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ஒரு வருடம் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்தந்த ஊராட்சிகளில் கட்டிடங்கள் காட்சி பொருளாகி விட்டது. மேலும் கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் இருப்பதால் உள்ளூர் மக்களின் பொழுது போக்கு இடமாகவும், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கின்றன.

எனவே கிராமப்புற மக்களின் நலன் கருதி கட்டப்பட்ட சேவை மைய கட்டிடங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story