குடியிருப்பு பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க எதிர்ப்பு: நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு


குடியிருப்பு பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க எதிர்ப்பு: நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-14T00:13:58+05:30)

குடியிருப்பு பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கியாஸ் சிலிண்டர் குடோன் பந

பந்தலூர்

குடியிருப்பு பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கியாஸ் சிலிண்டர் குடோன்

பந்தலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். மேலும் தனியார் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, நுகர்பொருள் வாணிப கழக குடோன் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டுவதால் பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என அச்சம் அடைந்துள்ளனர். இதனால் முதல்– அமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர்திகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

போராட்டம் நடத்த முடிவு

ஆனால் இதுவரை சமையல் கியாஸ் சிலிணடர் குடோன் கட்டும் பணி நிறுத்தப்பட வில்லை. இதனால் திராவிடமணி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையொட்டி எம்.ஜி.ஆர். நகரில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டும் இடத்தை திராவிடமணி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். நகரில் திராவிடமணி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், டாக்டர் கணேசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளை கூட்டி விவாதிப்பது, வருகிற 22–ந் தேதி நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Next Story