சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2016 9:45 PM GMT (Updated: 2016-12-14T00:34:14+05:30)

நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு ப

முத்தூர்,

நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story