ஊத்துக்கோட்டையில் பலத்த மழை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ஊத்துக்கோட்டையில் பலத்த மழை ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-14T01:18:21+05:30)

ஊத்துக்கோட்டையில் பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போலீஸ் ஜீப் சேதம் வார்தா புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது ஊத்துக்கோட்டையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஊத்துக்கோட்டை போலீஸ்நிலைய வளாகத்தில் இருந்த மிகவும் பழமை

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போலீஸ் ஜீப் சேதம்

வார்தா புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது ஊத்துக்கோட்டையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஊத்துக்கோட்டை போலீஸ்நிலைய வளாகத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த அரசமரம் வேருடன் சாய்ந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் சேதம் அடைந்தது. அதே போல் மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்த 70 வருட பழமை வாய்ந்த 2 ஆலமரங்கள் வேருடன் சாய்ந்தது. ஊத்துக்கோட்டையில் 2–வது நாளாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

பலத்த காற்றுக்கு 500–க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதம் அடைந்தன.

வெள்ளப்பெருக்கு

பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று தரைப்பாலத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்கிறது. சுருட்டப்பள்ளியில் உள்ள ஆரணி ஆற்று தடுப்பணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்கிறது.

ஊத்துக்கோட்டை ஏரிக்கு பாசனத்துக்காக ஆரணி ஆற்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Next Story