சேலத்தில் இருவேறு விபத்துகள்: டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதியது; 40 பயணிகள் உயிர் தப்பினர் மினிலாரி சாலையில் கவிழ்ந்ததில் முட்டைகள் உடைந்து நாசம்


சேலத்தில் இருவேறு விபத்துகள்: டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதியது; 40 பயணிகள் உயிர் தப்பினர் மினிலாரி சாலையில் கவிழ்ந்ததில் முட்டைகள் உடைந்து நாசம்
x
தினத்தந்தி 13 Dec 2016 11:30 PM GMT (Updated: 13 Dec 2016 7:49 PM GMT)

சேலத்தில் டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதியதில் 40 பயணிகள் உயிர் தப்பினர். மற்றொரு விபத்தில் மினிலாரி சாலையில் கவிழ்ந்ததில் முட்டைகள் உடைந்து நாசமானது. டிரான்ஸ்பார்மரில் மோதியது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று காலை தனியார் பஸ் ஒன்று வந்த

சேலம்,

சேலத்தில் டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதியதில் 40 பயணிகள் உயிர் தப்பினர். மற்றொரு விபத்தில் மினிலாரி சாலையில் கவிழ்ந்ததில் முட்டைகள் உடைந்து நாசமானது.

டிரான்ஸ்பார்மரில் மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று காலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கிருஷ்ணகிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். பஸ் சேலம் டால்மியா போர்டு அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. மேலும் அந்த பஸ் நிற்காமல் அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றது. பஸ் மோதிய உடனே டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு தானாகவே துண்டித்ததுடன் உடைந்து கீழே விழுந்தது. மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கின. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

தர்மபுரியில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று மதுரைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த மினிலாரியை முனிராஜ் என்பவர் ஓட்டினார். மினிலாரி நேற்று அதிகாலை சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மழை ஈரப்பதத்தினால் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி திடீரென சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது.

இதையடுத்து அந்த மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினிலாரியில் இருந்த முட்டைகள் உடைந்து நாசமானது. உடைந்த முட்டைகளில் இருந்த திரவம் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மினிலாரியை சாலையோரமாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story