தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


தஞ்சையில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-14T01:22:08+05:30)

தஞ்சை வடக்குவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). இவர் சம்பவத்தன்று தஞ்சை வடக்கு வீதி எம்.ஜி.ஆர்.சிலை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ரமேசிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரமேஷ்

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 20). இவர் சம்பவத்தன்று தஞ்சை வடக்கு வீதி எம்.ஜி.ஆர்.சிலை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ரமேசிடம் மது அருந்த பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரமேஷ் பணம் தர மறுத்துள்ளார். அப்போது அந்த 3 பேரும், ரமேசிடம் இருந்து ரூ.200–ஐ பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், வடக்குவாசல் மேலத்தெருவை சேர்ந்த அய்யப்பன் (21) மற்றும் கீழதெருவை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் 2 பேர் எனத்தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் தஞ்சை மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story