அச்சரப்பாக்கம் பகுதியில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்


அச்சரப்பாக்கம் பகுதியில் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 13 Dec 2016 7:55 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் பெரிய களக்காடி சாலையில் 2 இடங்களிலும், சித்தாமூர் வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் செய்யூர்–வந்தவாசி சாலை ஆகிய 6 இடங்களில் மிகப்பழமையான பெரிய மரங்கள் காற்றினால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையடுத்து அச்சரப்பாக்கம

அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் பெரிய களக்காடி சாலையில் 2 இடங்களிலும், சித்தாமூர் வெண்ணாங்குப்பட்டு சாலை மற்றும் செய்யூர்–வந்தவாசி சாலை ஆகிய 6 இடங்களில் மிகப்பழமையான பெரிய மரங்கள் காற்றினால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையடுத்து அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கார்த்திகேயன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரங்களை அகற்றினர்.

இடைக்கழிநாடு பேரூராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பிற பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் சாலைகளில் விழுந்த மரங்களை பேரூராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர்.


Next Story