சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 13 Dec 2016 10:15 PM GMT (Updated: 13 Dec 2016 8:34 PM GMT)

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறைவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக... வார்தா புயல் சென்னையில் துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த 12–ந்தேதி சென்னை, திருவள்ளூர்

சென்னை

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறைவிடப்பட்டுள்ளது.

புயல் காரணமாக...

வார்தா புயல் சென்னையில் துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த 12–ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மாணவ–மாணவிகளின் நலன்கருதி பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டு இருந்தது.

மிலாது நபி விழாயையொட்டி நேற்று விடுமுறை. வார்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தபோது சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் காற்று பலமாக வீசியதால் ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்தன. மின் கம்பங்கள் பல அடியோடு சாய்ந்தன. இவற்றை சரிசெய்வதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இதன் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் இன்று (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவித்துள்ளார்.

அதுபோல சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என்றும், அந்த தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story