கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த குழுக்கள் அமைத்து உள்ளோம் குமாரசாமி பேட்டி


கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்த குழுக்கள் அமைத்து உள்ளோம் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2016 8:46 PM GMT (Updated: 2016-12-14T02:16:44+05:30)

எங்கள் கட்சியை(ஜனதா தளம் (எஸ்)) பலப்படுத்த குழுக்களை அமைத்து உள்ளோம் என்று குமாரசாமி கூறினார். குழுக்கள் அமைப்பு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் க

பெங்களூரு

எங்கள் கட்சியை(ஜனதா தளம் (எஸ்)) பலப்படுத்த குழுக்களை அமைத்து உள்ளோம் என்று குமாரசாமி கூறினார்.

குழுக்கள் அமைப்பு

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 12 உறுப்பினர்களை உள்ளடக்கி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மது பங்காரப்பா தலைமையிலான குழு தட்சிண கன்னட மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், ஸ்ரீமந்த் பட்டீல் தலைமையிலான குழு மும்பை–கர்நாடக பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும், பண்டப்பா காசம்பூர் தலைமையிலான குழு ஐதராபாத்–கர்நாடக பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும், ஜி.டி.தேவேகவுடா தலைமையிலான குழு மைசூரு மற்றும் அதைச் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்யும்.

மும்பை–கர்நாடக பகுதிகளில்...

பெங்களூரு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டி.ஏ.ஷரவணா மற்றும் குபேந்திரரெட்டி ஆகியோர் சுற்றுப்பயணம் செய்வார்கள். அடுத்த 10 நாட்களில் இந்த குழு மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும். இந்த குழுக்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

எங்கள் கட்சியில் 10 பொதுச் செயலாளர்கள், 10 இணை செயலாளர்கள், 10 செயலாளர்கள், 3 மாநில துணைத்தலைவர்கள், ஒரு மூத்த துணைத்தலைவர் நியமனம் செய்யப்படுகிறார்கள். முதல் கட்டமாக 28 தொகுதிகளை சேர்ந்த எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 17 மற்றும் 18–ந் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும். வருகிற 19–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை மும்பை–கர்நாடக பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபட உள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story