டெங்கு காய்ச்சலை தடுக்க புதுக்கோட்டை நகரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

டெங்கு காய்ச்சலை தடுக்க புதுக்கோட்டை நகரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T02:20:58+05:30)

டெங்கு காய்ச்சலை தடுக்க புதுக்கோட்டை நகரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜாராம் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி முதல் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாக பகுதியில் கொசு மருந்து அடிக்கும் எந்திரத்தை சரக்கு ஆட்டோவில் வைத்து நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story