தா.பழூர், கோடாலிகருப்பூரில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா


தா.பழூர், கோடாலிகருப்பூரில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 13 Dec 2016 8:51 PM GMT)

தா.பழூர், கோடாலிகருப்பூரில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா

தா.பழூர்,

தா.பழூர், கோடாலிகருப்பூரில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது.

கார்த்திகை தீப திருவிழா

தா.பழூர் ஸ்ரீவிசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அன்று மாலையில் கோவில் முழுவதுமுள்ள பிரகார சுற்றுச்சுவர்களில் அகல்விளக்குகளை ஏற்றி அலங்கரித்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தா.பழூரை அடுத்த கோடாலிகருப்பூர் சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் மூலவர் மற்றும் சுவாமி அம்பாள் சன்னதிகள், பிரகார சுற்றுச்சுவர் என அனைத்து பகுதிகளிலும் அகல்விளக்குகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றி வழிபட்டனர். முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர்.

சொக்கப்பனை

இதைத்தொடர்ந்து 108 சங்குகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் குருக்கள் மகாதீபம் காட்டி முடிவில் சொக்கப்பனை கொளுத்தினர். அப்போது பக்தர்கள் சிவாய நம என உச்சரித்து பக்தியுடன் வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்து இருந்தனர்.

இதேபோன்று நாயகனைப்பிரியால், காரைக்குறிச்சி, அனைக்குடம், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத்திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

Next Story