பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதி


பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-14T02:21:04+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மக்கள் அவதி

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மிலாது நபியையொட்டி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்ததால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். பெரம்பலூர் வெங்கடேச புரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்திருந்த ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அந்த ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பணம் எடுத்து சென்றனர்.

ரூ.2,000-க்கு சில்லறை பெற...

அந்த ஏ.டி.எம். மையங்களில் ரூ.2,000 நோட்டுகளாகவே வந்தன. இதனால் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடை, பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரூ.2,000-க்கு பொதுமக்கள் சில்லறை பெற்று சென்றதை காண முடிந்தது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 1 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எனினும் அன்றாட செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதை தினமும் பார்க்க முடிகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story