ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன ஊர்வலம்


ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T02:22:03+05:30)

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன ஊர்வலம்

பாபநாசம்,

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி பாபநாசத்தில் அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி 7-வது வார்டில் உள்ள மாதா கோவில் தெரு , அந்தோணியார் கோவில் தெரு, காப்பன் தெரு ஆகிய 3 தெருக்களை சேர்ந்த அ.தி.மு.க. மகளிர் அணியினர், மகளிர் மன்றத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இளைஞர் இளம் சிறுத்தை பாசறையினர் பாபநாசம் புதிய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கீழவீதி, வடக்குவீதி, மேலவீதி வழியாக பாபநாசம் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலையை வந்து அடைந்தனர். அங்கு ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் செல்வக்குமாரி, அனுசுயா, சுந்தரி, மாலா, புனிதா, 7வது வார்டு அ.தி.மு.க. பிரதிநிதி செல்வராஜ், மாணவர் அணி அமைப்பாளர் நெப்போலியன், வார்டு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story