ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து அஞ்சலி


ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து அஞ்சலி
x
தினத்தந்தி 13 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-14T02:22:04+05:30)

ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து அஞ்சலி

தஞ்சாவூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்லம் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர்.சிலை அருகே மவுன ஊர்வலமும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளருமான சிங்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். பின்னர் அ.தி.மு.க.வினர் 30 பேர் மொட்டை அடித்து ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story