கவர்னர் உத்தரவின் பேரில் கருவடிக்குப்பம் குழந்தைகள் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை


கவர்னர் உத்தரவின் பேரில் கருவடிக்குப்பம் குழந்தைகள் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-14T02:25:36+05:30)

கவர்னர் உத்தரவின் பேரில் கருவடிக்குப்பம் குழந்தைகள் பூங்காவை பராமரிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பூங்கா புதுச்சேரி கருவடிக்குப்பம் வாய்க்கால் அருகில் ஒரு குழந்தைகள் பூங்கா உள்ளது. சிங்கம் பூங்கா என்று அழைக்கப்படும

புதுச்சேரி

கவர்னர் உத்தரவின் பேரில் கருவடிக்குப்பம் குழந்தைகள் பூங்காவை பராமரிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் பூங்கா

புதுச்சேரி கருவடிக்குப்பம் வாய்க்கால் அருகில் ஒரு குழந்தைகள் பூங்கா உள்ளது. சிங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் இந்த பூங்கா போதுமான பராமரிப்பு இல்லாமல் போனதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு மூடிக் கிடக்கிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி சிங்கம் பூங்காவை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூடிக்கிடக்கும் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது இந்த பூங்கா பற்றிய விவரங்களை அவர் கேட்ட போது உழவர்கரை நகராட்சியின் பராமரிப்பில் இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அந்த பூங்காவை வனத்துறையிடம் ஒப்படைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இதன்பேரில் அந்த பூங்காவை உழவர்கரை நகராட்சியிடம் இருந்து பெறுவதற்கு வனத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்தபின் அந்த பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

பராமரிப்பு பணிகள்

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கருவடிக்குப்பம் வாய்க்கால் அருகில் உள்ள குழந்தைகள் பூங்கா தற்போது உழவர்கரை நகராட்சியிடம் உள்ளது. அதனை வனத்துறை பெறுவதற்கான உத்தரவுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த பூங்கா வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதும் அதனை பார்வையிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.


Next Story