‘வார்தா’ புயல் பாதிப்பு: புதுச்சேரியில் இருந்து சென்னை ரெயில்கள் ரத்து


‘வார்தா’ புயல் பாதிப்பு: புதுச்சேரியில் இருந்து சென்னை ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 13 Dec 2016 10:00 PM GMT (Updated: 13 Dec 2016 8:55 PM GMT)

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ‘வார்தா’ புயல் ‘வார்தா’ புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்ப

புதுச்சேரி

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

‘வார்தா’ புயல்

‘வார்தா’ புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் ரெயில் தண்டவாளங்களில் குறுக்கே பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை ரெயில்கள் ரத்து

இதன் காரணமாக புதுவையில் இருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இதனால் புதுவையில் இருந்து தினந்தோறும் காலை 5.35 மணிக்கு சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16116), மதியம் 1.20 மணிக்கு திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56042), மதியம் 3.15 மணிக்கு புறப்படும் சென்னை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56038) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. புதுவையில் இருந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண் 12868) நேற்று ரத்து செய்யப்பட்டது.

பாசஞ்சர் ரெயில்கள் ஓடின

புதுவையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு பாசஞ்சர் ரெயில்கள் வழக்கம் இயங்கின.

சென்னை, திருப்பதி, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று புதுவைக்கு வரவேண்டிய ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் தாமதமாக வந்தன.


Next Story