கப்பல் சிக்னலுக்கான வெடி வெடித்ததில் ஓய்வு பெற்ற கப்பல் என்ஜினீயர் வீட்டு ஜன்னல் சேதம்

கப்பல் சிக்னலுக்கான வெடி வெடித்ததில் ஓய்வு பெற்ற கப்பல் என்ஜினீயர் வீட்டு ஜன்னல் சேதம்
x
தினத்தந்தி 14 Dec 2016 7:45 PM GMT (Updated: 14 Dec 2016 2:36 PM GMT)

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ஸ்நோஸ் காலனியை சேர்ந்தவர் ராபர்ட் ரொட்ரிகோ. இவருடைய மகன் அமல்ராஜ் ரொட்ரிகோ. இவர் கப்பலில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ஸ்நோஸ் காலனியை சேர்ந்தவர் ராபர்ட் ரொட்ரிகோ. இவருடைய மகன் அமல்ராஜ் ரொட்ரிகோ. இவர் கப்பலில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் வீட்டின் ஜன்னலில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு வெடி வந்து விழுந்து வெடித்தது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. அந்த இடத்தில் சிறிய பாராசூட் போன்று விழுந்து, அதில் இருந்த வெடிமருந்தும் எரிந்தது.

இது குறித்து அமல்ராஜ் ரொட்ரிகோ தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கப்பலில் ஆபத்து காலத்தில் பயன்படுத்தக்கூடிய சிக்னல் வெடியை யாரோ வெடித்து இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டியில் சிக்னல் வெடியின் பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர். கப்பலில் பயன்படுத்தக்கூடிய இந்த சிக்னல் வெடி எப்படி வெளியில் வந்தது? வெடித்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதே போன்ற ஒரு வெடி கடந்த வாரத்தில் துறைமுகம் அருகே உள்ள ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு அருகே விழுந்து வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story