தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலெக்டரிடம் மனு


தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 Dec 2016 8:00 PM GMT (Updated: 14 Dec 2016 3:53 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார்.

எம்.எல்.ஏ. கோரிக்கை

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குளி ரமேஷ், உடன்குடி பாலசிங், வரண்டிவேல் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜனகர் மற்றும் நிர்வாகிகளுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு கலெக்டர் ரவிகுமாரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

பள்ளிக்கூட கட்டிடம்

மேலும் திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட முருகன்குறிச்சி முதல் பிச்சிவிளை, சீர்காட்சி, உடன்குடி வரையிலான சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story