ஆம்பூர் பஜார் பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வீதி, வீதியாக சென்று ஆய்வு


ஆம்பூர் பஜார் பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வீதி, வீதியாக சென்று ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2016 9:30 PM GMT (Updated: 14 Dec 2016 5:50 PM GMT)

ஆம்பூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருட்டை தடுக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக பஜார் பகுதிகளில் கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமரா பொருத

ஆம்பூர்,

ஆம்பூர் பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருட்டை தடுக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக பஜார் பகுதிகளில் கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நகர வர்த்தக சங்க அலுவலகத்தில் நடந்தது. ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப்.கென்னடி தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் துளசிராமன் முன்னிலை வகித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் பஜார் பகுதியில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்துவது என்றும், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் பஜார் பகுதிக்குள் வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஜவுளிரெடிமேட் சங்க செயலாளர் ஞானசேகரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் கஜேந்திரன், காமராஜ், பூ வியாபாரி சங்க நிர்வாகி ஸ்ரீதர், பாங்கி மார்க்கெட் மேலாளரர் கலிலூர்ரஹ்மான் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பஜார் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா எந்தந்த பகுதிகளில் பொருத்தலாம் என வீதி, வீதியாக சென்று ஆய்வு செய்து, முதற்கட்டமாக 30 இடங்களில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story