ஆரணியில் வங்கிகளில் பணம் எடுக்க அலைமோதிய மக்கள் கூட்டம்


ஆரணியில் வங்கிகளில் பணம் எடுக்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2016 9:00 PM GMT (Updated: 2016-12-15T00:20:09+05:30)

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் வைத்திருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் டெபாசிட் செலுத்தினர். வங்கிகளில் கொடுத்து சில்லரையாகவும் மாற்றினர். ஆனால் வங்

ஆரணி

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் வைத்திருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் டெபாசிட் செலுத்தினர். வங்கிகளில் கொடுத்து சில்லரையாகவும் மாற்றினர். ஆனால் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி, ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் தேவைக்கான பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் வங்கிகளை தவிர தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் பணம் இன்றி மூடியே கிடக்கிறது.

விடுமுறை கழித்து நேற்று வங்கிகள் செயல்பட்டன. ஆனால் ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடந்தன. இதனால் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. ஆரணி – தச்சூர் சாலையில் 10–க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story