கோவையில் செல்போன் மூலம் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி? வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது


கோவையில் செல்போன் மூலம் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி? வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
x
தினத்தந்தி 14 Dec 2016 10:00 PM GMT (Updated: 14 Dec 2016 7:36 PM GMT)

கோவையில் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி? என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு முகாம் கோவை கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு முகாம் டாடாபாத்தில் நேற்று நடந்தது. இதில் வங்

கோவை

கோவையில் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி? என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்

கோவை கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் ரொக்கமில்லா பரிமாற்றம் செய்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு முகாம் டாடாபாத்தில் நேற்று நடந்தது. இதில் வங்கியின் கோட்ட மேலாளர் சுந்தரபாரதி, துணை பொதுமேலாளர் பரமசிவம், மூத்த மேலாளர் மனோகரன் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ‘சுவைப்’ கருவி, இன்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், மொபைல் செயலி, இ-வாலட் ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. சிலரின் செல்போன் எண்களில் செயலியையும்(அப்ளிகேசன்) நிர்மாணித்து கொடுத்தனர்.

இதுகுறித்து கனரா வங்கி கோட்ட மேலாளர் சுந்தரபாரதி கூறியதாவது:-

மத்திய அரசு மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்காக கனரா வங்கி ‘யு.பி.ஐ. எம்பவர்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியை செல்போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த செயலி மூலம் தினமும் ஒரு ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரை மாற்ற முடியும். ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை மாற்ற முடியும். இதற்காக பாஸ்வேர்டு, பின் நெம்பரை வாடிக்கையாளரே உருவாக்கி கொள்ள முடியும். மேலும் நமக்கு பணம் தேவை என்றால் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்து அவர் மூலம் பணத்தை நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.

பயப்பட தேவையில்லை

செல்போன் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்போன் எண் மற்றும் ‘டெபிட்’ கார்டை வங்கி கணக்கில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் தான் இந்த செயலியை செயல்படுத்த முடியும். இதில் பணம் பரிமாற்றம் செய்வது மிக எளிது. ஒருவேளை செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. செல்போன் செயலியை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளரின் பாஸ்வேர்டு, பின் நெம்பர் இருந்தால் தான் அதிலிருந்து பணத்தை மாற்ற முடியும். இங்கு வந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பண பரிமாற்றம் மேற்கொள்வது எப்படி? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இது தவிர அனைத்து கனரா வங்கி கிளைகளிலும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் 2 பேரை தற்காலிகமாக பணி நியமனம் செய்து அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி? மற்றும் மின்னணு பண பரிமாற்றம் செய்வது எப்படி? என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story