திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் பாசிபடிந்த தண்ணீரை அகற்றிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும் பக்தர்கள் கோரிக்கை


திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் பாசிபடிந்த தண்ணீரை அகற்றிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2016 10:15 PM GMT (Updated: 14 Dec 2016 8:52 PM GMT)

திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் பாசிபடிந்த தண்ணீரை அகற்றிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெப்பக்குளம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் தெப்பக்குளம் உள்ளது. இதில் ஆண்டு தோறும் தை மாதத்தில் தெப்ப உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். இதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் தெய்வானையுடன் மு

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் பாசிபடிந்த தண்ணீரை அகற்றிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெப்பக்குளம்

திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் தெப்பக்குளம் உள்ளது. இதில் ஆண்டு தோறும் தை மாதத்தில் தெப்ப உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். இதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி தெப்பக்குளத்தை 3 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதேபோன்று இரவில் மின்னொளியிலும் சுவாமி தெப்பக்குளத்தை சுற்றி வருவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

கோரிக்கை

இத்தகைய சிறப்புமிக்க தெப்பக்குளத்தை திருவிழா முடிந்தபின்பு கோவில் நிர்வாகம் முறையாக பராமரிப்பது இல்லை. தெப்பக்குளத்தில் தற்போது மழைநீர் நிற்கிறது. கழிப்பறை செல்பவர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதைதடுக்க கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோன்று தேங்கி நிற்கும் தண்ணீரும் பாசிபடிந்து துர்நாற்றம் வீசுகிறது. தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை புனித நீராக கருதி பக்தர்கள் தங்களது தலைகளில் தெளித்துக்கொள்வர். இன்னும் சில பக்தர்கள் கை, கால்களை தெப்பக்குளத்தில் சுத்தம் செய்து விட்டுத்தான் கோவிலுக்குள் செல்வர்.

திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்காதது பக்தர்களை வேதனைபடுத்தி உள்ளது. தெப்பக்குளத்தை கழிப்பறையாக பயன்படுத்துவதை தடுத்து, மாசுபடிந்த தண்ணீரை அகற்றிவிட்டு புதிதாக தண்ணீரை நிரப்பி பக்தர்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவர கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story